சூரியனுக்கு நன்றி !

உலகமெங்கும் உறைபனி நீங்கி
சூரிய வெப்ப கதிர்கள்
பூமியின் மடிமேல் பதிந்து
வருடாந்திர புதுமை
புரியும் சடங்கை,
போகி போய் பொங்கல் என்றும்
லொரி போய் சங்கராந்தி என்றும்
வெவேறு பெயர்களில் அழைத்தாலும்
செயற்கையாய் வாழ கற்று கொண்ட
நவீன மனிதன்
பூமியில் உயிரின வாழ்தலுக்கு
வழி வகுக்கும்
சூரியனுக்கு விசுவாச நன்றி
சொல்ல மட்டும்
இயற்கையாய் …..
மனித நேயம்
என்னென்றும்
நிலைத்திருக்கட்டும்! Omsmusings